’தனது தொகுதியை’ கவனிக்க இன்னொரு பிரதிநிதி : வசமாக சிக்கிய நடிகர்

sunny doel
Last Modified செவ்வாய், 2 ஜூலை 2019 (15:01 IST)
பிரபல ஹிந்தி நடிகரான சன்னி தியோல், கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்று எம்பியானார்.  தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உதவி செய்ய தானே களத்தில் இறங்காமல் இன்னொரு பிரதிநிதியாக  குர்பீத் சிங் பல்கேரி என்பவரை அவர் நியமித்துள்ளதுதான் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தான் சினிமாவில் பிசியான நடிகர் என்றால், அந்த துறையைக் கவனம் செலுத்த வேண்டியதுதானே! அதுவல்லாமல் எதற்க்காக தொகுதியில் போட்டியிட்டு தற்போது இன்னொரு பிரதிநிதியை சன்னி தியோல் நியமித்துள்ளார் என்று பலரும் அவருக்கு விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :