அருண்விஜய்-லைகா இணையும் படத்தின் அட்டகாசமான டைட்டில்

Last Modified செவ்வாய், 2 ஜூலை 2019 (20:20 IST)
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் விக்டர் என்ற வில்லன் கேரக்டரில் நடித்ததற்கு பின்னர் அருண்விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம். அதன்பின்னர் அவரது நடிப்பில் வெளியான 'குற்றம் 23', 'செக்க சிவந்த வானம்', 'தடம் ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. தற்போது அவர் பாக்சர், அக்னி சிறகுகள், சாஹோ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'மாஃபியா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அட்டகாசமான டைட்டிலே இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
அருண்விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக இளம் நடிகை ப்ரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் பிரசன்னா நடித்து வருகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையில்
கோகுல் பினாய் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :