'கோலமாவு கோகிலா' நெல்சன் இயக்கத்தில் சொந்தமாக தயாரித்து நடிக்கும் சிவகார்த்திகேயன்!

VM| Last Modified திங்கள், 11 மார்ச் 2019 (10:57 IST)
விஜய் சேதுபதியை போல், நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த ஆண்டு 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்..


 
தற்போது  ராஜேஷின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் ரிலீசுக்காக காத்திக்கொண்டிருக்கிறது.
 
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன்,   'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர 'இரும்புத்திரை' மித்ரனின் இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படமும், சன் பிக்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படமும், 'சிறுத்தை' சிவாவின் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாகப் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
இந்நிலையில் 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் படத்திலும் சிவா நடிக்க உள்ளார். நெலசனும், சிவாவும்  விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய காலத்தில் இருந்தே நட்புடன் இருந்து வருகிறார். கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு பாடலை எழுதியது சிவா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :