செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 13 மார்ச் 2019 (21:41 IST)

சிவகார்த்திகேயன் vs விஜய் தேவரகொண்டா: உண்மையான ஹீரோ யார்?

கோலிவுட்டில் சிவகார்த்திகேயன் எப்படி வளர்ந்து வரும் ஹிரோவாக இருக்கிறாரோ, அதேபோல் டோலிவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோக்களின் பட்டியலில் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் பெயரும் இருக்கும். 
 
இந்நிலையில், இன்று சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பெயர் வெளியானது. ஆம், இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்திற்கு ஹிரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், மைத்திரி மூவீஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். இதை ஆனந்த் அண்ணாமலை இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஹீரோ என்று முன்னரே பெயர் வைக்கப்பட்டுவிட்டதாம். 
 
எனவே, யாரேனும் ஒருவர் படத்தின் தலைப்பை மாற்றியாக வேண்டும். விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஹீரோ தலைப்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்துவிட்டதாகவும், அதை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி புதுப்பித்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே, ஹிரோ என்ற தலைப்பு சிவகார்த்திகேயனுக்கு செல்லுமா அல்லது விஜய் தேவர்கொண்டாவிற்கு செல்லுமா என்பதை தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்யும் என தெரிகிறது.