வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (11:35 IST)

சமந்தா விவகாரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்: கங்கனா ரனாவத்

சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் பிரிவதற்கு இந்த நடிகர் தான் காரணம் என கங்கனா ரனாவத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய பதிவுகளை செய்து வருவார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யாவை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர்களுடைய பிரிவிற்கு விவாகரத்து நிபுணர் என்று கூறப்படும் இந்த பிரபல நடிகர் தான் காரணம் என்று கூறியுள்ளார்
 
அந்த பிரபல நடிகரும் சமீபத்தில் தனது மனைவியை பிரிந்து நட்பை தொடர உள்ளதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாலிவுட் பிரபல நடிகருடன் நாகசைதன்யா தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் இருவரும் நெருக்கமாக இருப்பதை அடுத்து சமந்தா விவகாரம் குறித்து அவர் அறிவுரை கூறியதாகவும் அதனை அடுத்து நாக சைதன்யா தனது மனைவியை பிரிய முடிவு செய்ததாகவும் கங்கனா ரனாவத் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.