வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (09:41 IST)

சமந்தா, நாக சைத்தன்யா பிரிவு - நாகர்ஜூனா உருக்கம்!

சமந்தா, நாக சைத்தன்யா பிரிவு குறித்து நடிகர் நாகர்ஜூனா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
 
சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் வாழ்க்கை நேற்றுடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆம், நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து செய்ய முடிவு செய்து விட்டதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 
 
இதனிடையே சமந்தா, நாக சைத்தன்யா பிரிவு குறித்து நாகர்ஜூனா, கனத்த இதயத்துடன், இதை சொல்கிறேன் சமந்தாவிற்கும் நாக சைத்தன்யாவிற்கு இடையில் என்ன நடந்தாலும் அது மிகவும் துரதிருஷ்டவசமானது. கணவன் மனைவி இடையே நடப்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். 
இருவரும் எனக்கு அன்பானவர்கள். சமந்தாவுடன் செலவழித்த தருணங்களை என் குடும்பத்தினர் எப்போதும் போற்றுவார்கள். அவள் எப்போதும் எங்களுக்கு அன்பாக இருப்பாள். கடவுள் அவர்கள் இருவருக்கும் இதனை கடந்து வரும் பலத்தை கொடுக்கட்டும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
 
கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்துகொண்டார். நான்கு ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை நேற்று முற்றுப்பெற்றது.