1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (10:30 IST)

சித்தார்த் போட்ட டுவிட்: சமந்தா விவாகரத்து விவகாரமா?

நடிகை சமந்தா நேற்று அதிகாரப்பூர்வமாக தனது விவாகரத்து முடிவை அறிவித்திருந்த நிலையில் சித்தார் பதிவு செய்த டுவிட் ஒன்று சமந்தாவின் விவாகரத்து விவகாரத்தை கிண்டல் செய்திருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நேற்று 
 
நேற்று சித்தார்த் பதிவு செய்த டுவிட் ஒன்றில் எனது ஆசிரியர் எனக்கு சொல்லிக்கொடுத்த முதல் பாடம் என்னவெனில் ’ஏமாற்றுவார்கள் எப்போதும் வெற்றி பெற மாட்டார்கள்’ என்று தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி ’நாகூர் பிரியாணி உளுந்துர் பேட்டை நாய்க்கு கிடைக்கும் என்று எழுதி இருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது’ என்றும் பதிவு செய்திருந்தார்.
 
இந்த இரண்டு பதிவுகளும் நடிகை சமந்தாவின் விவாகரத்து விவகாரத்தை குறிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஏற்கனவே சித்தார்த்-சமந்தா இடையே காதல் இருந்ததாகவும் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது