சர்க்கார் படத்தில் படுமோசமாக கெட்ட வார்த்தை பேசிய விஜய்.! நீக்கப்பட்ட காட்சி இதோ.!

Last Updated: ஞாயிறு, 17 மார்ச் 2019 (13:26 IST)
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த தீபாவளி பண்டிகையன்று வெளியான விஜய்யின் சர்கார் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் அபார சாதனையை படைத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. 
 
தற்போதுள்ள அரசியலை விமர்சிக்கும் வகையில் உருவாகிய இப்படம் வெளிவந்த முதல் நாளிலேயே சென்னையில் மட்டும்  2.37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களிலேயே ஒரே நாளில் 2 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்த படம் என்ற பெருமையை சர்கார் படம் தட்டிச்சென்றது. 
 
படம் வெளிவந்தபோது படத்தில் இடம்பெற்ற அரசின் இலவச திட்டங்களை நெருப்பில் போட்டு எரிக்கும் காட்சிகளும், சர்ச்சை வசனங்களும் அரசியல் பிரபலங்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சில காட்சிகளை நீக்கவும் அரசியல் பிரமுகர்கள் கோரிக்கைவைத்தனர். 
 
இந்த நிலையில் தற்போது சர்க்கார் படத்தில் நடிகர் விஜய் மோசமான வசனத்தை பேசும் காட்சி ஒன்று திரைப்படத்தில் வராத நிலையில் அது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
https://twitter.com/Vijay_FC_/status/1106788099701399552


இதில் மேலும் படிக்கவும் :