புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 16 மார்ச் 2019 (11:54 IST)

ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த பெண் ரசிகைகள்! நெகிழவைத்த விஜய்! வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அட்லீ இயக்குகிறார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகம் எடுத்திருக்கும் நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

 
அந்தவகையில் தற்போது இப்படத்தின் படப்பிப்பில் தளபதியை ஒருமுறையாவது பார்த்துவிடமாட்டோமா என்ற என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் பல பேர் குவிந்தனர்.  அதில் ஒரு புறம் பெண் ரசிகைகள் பெரும் கூட்டமாக நின்றிருந்தனர். அந்த நேரத்தில் தளபதி விஜய் அங்கு தென்பட, ரசிகர்கள் ஒரே குஷியாகி கோஷமிட்டனர். மேலும் அவர்களை பார்த்த நடிகர் விஜய்  எப்போதும் இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியாக கையசைத்தார். 
 
இப்படித்தான் ஏற்கனவே ஒருமுறை விஜய் 63 படப்பிடிப்பில் விஜய்யை சந்திக்க பல ரசிகர்கள் ஒன்றுகூடிய போது எதிர்பாராத விதமாக வேலி ஒன்று சரிந்து விழுந்தது. அதனை விஜய் ஓடி சென்று தாங்கி பிடித்தார். அந்த வீடியோ ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வைரலாகிய  நிலையில் இப்போது இந்த புது வீடியோவும் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.