கல்யாணத்திற்கு முந்தைய அன்புக்கும், பிந்தைய அன்புக்கும் வித்தியாசம் உண்டு! சமந்தா

Last Updated: திங்கள், 1 ஏப்ரல் 2019 (17:23 IST)
தமிழ் பெண்ணாக பிறந்து ஆந்திராவிற்கு மருமகளாக சென்றுள்ள நடிகை சமந்தாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக படங்களில் படு பிஸியாக நடித்து, நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
 
அந்தவகையில் தற்போது கணவர் நாக சைதன்யாவுடன் சேர்ந்து நடித்துள்ள 'மஜிலி' திரைப்படத்தின்  ட்ரெய்லருக்கும்  இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் ரசிகர்கள் மத்தியில் படத்தின்மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துவிட்டது.
 
சமந்தா திருமணத்துக்குப் பிறகு கணவருடன் இணைந்து நடித்ததை பற்றி கூறியிருப்பதாவது, 
 
கணவன் மனைவியான  நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கும். ஆனால் அந்த எதிர்பார்ப்பை எங்களால் பூர்த்தி செய்ய முடியாது என்ற காரணத்தால் தான் இவ்வளவு நாள் தவிர்த்து வந்தோம்.  இந்தக்காலத்திலும் நானும் சைதன்யாவும் மரத்தைச் சுற்றிப் பாடிக்கொண்டிருந்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால் அந்த படம் வித்தியாசமாக இருக்க வேண்டும்.
 
'மஜிலி' அப்படிப்பட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம். எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. திருமணத்துக்கு முந்தைய அன்புக்கும், பிந்தைய அன்பிற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரத்தில்  ஒரு பெண்ணுக்கும், அவள் கணவருக்கும், கணவரின் குடும்பத்திற்கும் இடையே இருக்கும் அழகிய உறவைக் காட்டும் படம் 'மஜிலி' இந்த படம் எதிர்பார்த்ததை போலவே அற்புதமாக உருவாகியுள்ளது என சமந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :