வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2019 (16:38 IST)

"வேம்பு" கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் புது இலக்கணம்! இயக்குனருக்கு நன்றி தெரிவித்த சமந்தா !

ஏராளமான திரை நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் சமந்தாவின் நடிப்பை குறித்து சர்வதேச ஊடகம் பாராட்டு தெரிவித்துள்ளது. 
 
தேசிய விருது பெற்ற “ஆரண்ய காண்டம்” படத்தின் இயக்குனர்  தியாகராஜன் குமாரராஜா 8 ஆண்டுகளுக்கு பின் வெளியாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா நடிகர்கள் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில்  அற்புதமாக நடித்திருந்தபோதிலும் சமந்தாவின் கேரக்டரையும்  அவரது  துணிச்சலான நடிப்பையும்  குறிப்பிட்டு பலரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
 
அந்தவகையில் நடிகை சமந்தா ”இப்படியொரு கதாபாத்திரத்தை அளித்து வரவேற்புச் செய்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவுக்கு நன்றி” எனக்கூறி ட்வீட் செய்தார். அந்த ட்வீட் வைரலான நிலையில், சமந்தாவின் வேம்பு கதாபாத்திரம், தமிழ் சினிமாவில் புதிய இலக்கணத்தை உருவாக்கும் என்கிறார்கள் திரைப்பட ஆர்வலர்கள்.