வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sinoj
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (16:47 IST)

அந்த பிரமாண்ட படம் வெளியானால்....தியேட்டர்களைக் கொளுத்துவோம் - பாஜக எம்பி எச்சரிக்கை

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.
 
ஏற்கனவே ஆர் ஆர் ஆர் படத்தில்  ராம்சர அல்லூரி சீதராம ராஜூவாக நடித்துள்ள கதாப்பாத்திர ப்ரமோ வெளியானது.
 
இதையடுத்து,  ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ள கதாபாத்திரப் ப்ரோமோ வெளியானது. இதில் ஜூனியர் என்.டி,.ஆர் , கொமரம் பீம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
கொமரம் பீமை ஒரு மதத்திற்குள் அடக்க முயற்சி செய்துள்லதாக ராஜமௌலி மீது விமர்சனம் உருவாகியுள்ளது.
 
இந்நிலையில், பழங்குடியின மக்களிடையே இதற்குக் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.
 
கொமரம் பீம் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டுமெனவும் குரல் கொடுத்துவருகின்றனர்.
 
மேலும், பாஜக எம்பி சோயம் பாபுராவ், கொமரம் பீம் ஒரு மதத்தைச் சார்ந்தவராகச் சித்தரிப்பது பழங்குடியின மக்களை புண்படுத்துவதுபோல் உள்ளது. அக்காட்சியை நீக்க வேண்டும்…இல்லையென்றால் இப்படம் வெளியாகின்ற தியேட்டர்களைக் கொளுத்துவதாக எச்சரித்துள்ளார்.
 
 
 
https://youtu.be/BN1MwXUR3PM