திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 மே 2023 (17:11 IST)

''தி கேரளா ஸ்டோரி'' பட நடிகையின் தனிப்பட்ட விவரங்கள் லீக்!

adah sharma
.

இயக்குனர் சுதீப்தோ சென்  இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தி கேரளா ஸ்டோரி.

இப்படம் கடந்த 5 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸான நிலையில், இப்படத்தில் 32,000 இந்து பெண்களை மூளைச் சலவை செய்து,மதம் மாற்றி அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் சேர்ததாகச் சித்தரித்திருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், கேரளா, தமிழ் நாடு, மேற்குவங்காளம் உள்ளிட்ட மா நிலங்களில் பலத்த எதிர்ப்பு நிலவியது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி இப்படம் தமிழகம், கேரளா  உள்ளிட்ட மாநிலங்களில் வெளியாகியுள்ளது. இப்படம் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இப்படத்தில் நடித்த நடிகை அதா சர்மா ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில், அவருக்கு சமூக வலைதள பக்கங்களில் தொல்லை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் நடிகை அதா சர்மா, சமூக ஊடக பயனர் ஒருவரால் துன்புறுத்தப்பட்ட நிலையில், நடிகை அதா சர்மாவின் தனிப்பட்ட விவரங்களும் வெளியானது. அவரது புதிய தொடர்பு எண்ணையும் வெளியில் கசியவிடுவதாக அந்த  நபர் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.