1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 18 மே 2023 (18:40 IST)

’தி கேரளா ஸ்டோரி’ படத்தால் விபரீதம் எங்களை குற்றம் சொல்ல கூடாது.. மம்தா பானர்ஜி..!

Mamtha
’தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு மேற்குவங்க மாநிலம் தடை விதித்த நிலையில் இது குறித்து வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து ’தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை முதல் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டால் அதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் இது மாநில அரசின் வெற்றி தோல்வி என்ற கோணத்தில் கட்டுக் கதையை சித்தரிக்க முயல வேண்டாம் என்று கூறியுள்ளார். 
 
மேலும் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவது மூலம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் எதிர்க்கட்சியினர் எங்களை குறை சொல்லாதீர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva