செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 19 மே 2023 (15:27 IST)

200 கோடி வசூலை நெருங்கும் தி கேரளா ஸ்டோரி!

சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இஸ்லாமிய மக்களை தவறாக சித்தரிப்பதாக பல அமைப்புகள் அந்த படத்தை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்தின. ஆனாலும் படம் பல மாநிலங்களில் வெளியானது. சில மாநிலங்களில் மட்டும் தடை செய்யப்பட்டது. இதில் தமிழகத்தில் ஒரு நாள் மட்டுமே ஓடியது. அடுத்த நாள் முதல் திரையரங்குகளே அந்த படத்தை திரையிடவில்லை. மேற்கு வங்க அரசும் இந்த படத்துக்கு தடை விதித்தது.

இந்நிலையில் மே 12 ஆம் தேதி பல நாடுகளில் ரிலீஸான இந்த படம் நல்ல வசூலை ஈட்டி வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படம் இப்போது வரை 170+ கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாகவும், விரைவில் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் எனவும் சொல்லப்படுகிறது.