வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 மே 2023 (16:40 IST)

''தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்- உச்சநீதிமன்றம் உத்தரவு

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட்டில் தயாரான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கடந்த  மே 5  மாதம்  ஆம் தேதி  வெளியானது . இந்த படம் தமிழ்நாடு, கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அமைப்புகளால் எதிர்ப்பு ஏற்பட்டதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிடவில்லை என்று கூறிர். ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் இன்னும் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில்  தி கேரளா ஸ்டோரி படத்திற்கு  முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு தடைவிதித்துள்ளது.

ஏற்கனவே,  தி கேரளா ஸ்டோரி என்ற பாலிவுட் படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக அந்த படத்தை தடை செய்ய கோரி பல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. ஆனால் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்த படத்தை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் பதில் அளித்தது.

இதற்கிடையே  சில மாநிலங்களில் இப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் தமிழ்நாட்டிலும் படம் தடை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததால் தமிழக அரசு விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் பதில் அளித்த தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி படம் எங்கும் தடை செய்யப்படவில்லை என்றும், படத்திற்கு பார்வையாளர்கள் அதிகம் இல்லாததால் திரையரங்குகளே படம் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில்,  நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி படத்தை ‘’மேற்கு வங்கத்தில் திரையிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது’’ உச்ச நீதிமன்றம். மேலும், ‘’தமிழ்நாட்டில் இப்படத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் தடை செய்யக்கூடாது எனவும்,  இப்படத்தை திரையிடும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று’’ உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.