வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (17:35 IST)

’பெப்சி ’தலைவர் பதவியை கைப்பற்றிய பிரபல இயக்குநர் ...

இன்று நடைபெற்ற பெப்சி தலைவருக்கான தேர்தலில் பிரபல இயக்குநர் ஆ.கே. செல்வமணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர், செயலாளர்  மற்றும் பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளுக்கு மட்டும் இன்று காலைவேளையில் சென்னையில் தேர்தல் நடைபெற்றது.  இதில் துணைத்தலைவர்கள்  5 பேர் இணைச்செலாளர்கள் 5 பேர் ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன.
 
தலைவர் பதவிக்கு இரண்டு பேர் போட்டி இட்டனர். இதில் செல்வமணி 49 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட டி.கே மூர்த்தி என்பவர் 16 வாக்குகள் பெற்றார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சண்முகம் 50 வாக்குகள் பெற்றார். பொருளாளர் பதிவிக்கு போட்டியிட்ட சுவமிநாதன் 47 வாக்குகள் பெற்றார். 
 
மேலும் தலைவராக தேர்வு  செய்யப்பட்ட ஆர்.கே.செல்வமணியின் அணியினரே அனைத்து பதவிகளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.