1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (13:24 IST)

வெடி குண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் ராணுவ மேஜர் பலி...

காஷ்மீர் சோரி நவ்சேரா பகுதியில் நேற்று மாகைவேளையில் கண்ணி வெடிகுண்டுகள் இருப்பது தெரிந்ததால் இவற்றை செயலிழக்க வைக்க வேண்டி இன்ஜினியர் மேஜர் சித்ரேஷ் என்பவர் இந்த முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு குண்டு வெடித்தது. இதில் சித்ரேஷ் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியனார். மற்றொடு வீரர் படுகாயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரமரணம் அடைந்த சித்ரேஷ் (31)உத்ராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.கடந்த மார்ச் மாதம் தான் அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. இந்நிலையில் சித்ரேஷின் மரணத்தால் அரவது குடும்பத்தார் மற்றும் ஊரார் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
காஷ்மீரில் இரண்டு நாட்களுக்கு முன்னால் பயங்கரவாதிகளால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 45 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அஹமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தினர். இந்த தாக்குதலுக்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்ந்திய நிலையில் இந்த சம்பவம் காஷ்மீர் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.