வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (17:24 IST)

டி. ஆர். மகன் மதமாற்றம் – பின்னணி காதலா ?

பிரபல நடிகரும் இயக்குனருமாகிய டி ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் தன் தந்தை முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளது திரையுலகில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

டி ராஜேந்தர் திரையுலகில் எப்படிப் பன்முகத் தன்மைக் கொண்டவரோ அதெப் போலவே திரையுலகிற்கு வெளியேயும் பலத் திறமைகள் கொண்டவர். இந்துமத நம்பிக்கைகளில் தீவிர நம்பிக்கைகள் உள்ள அவர், ஜோதிடத்திலும் வல்லுனர்.

அவரது முதல் மகன் சிலம்பரசனும் இந்து மத ஆன்மீக உலகில் நம்பிக்கை உள்ளவர். இப்படி தீவிர இந்து பாரம்பரியம் உள்ள டி.ஆரின் குடும்பத்தில் இருந்து அவரது இளையமகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிய செய்திதான் இன்று காலை முழுவதும் திரையுலகில் ஹாட் நியுஸ். தனது மகன் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கு டி ஆர் குடும்பம் சம்மதம் தெரிவித்தாலும் அதற்கானக் காரணத்தை வெளியிடவில்லை.

இந்நிலையில் குறளரசன் ஒரு இஸ்லாம் மதப்பெண்ணைக் காதலித்து வருவதாகவும் அவரை மணக்க அந்தப் பெண்ணின் பெற்றோர் விதித்த நிபந்தனைகளாலேயே இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் இன்னும் டி ஆர் குடும்பத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை.