1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: வெள்ளி, 26 மே 2023 (13:12 IST)

கேன்ஸ் திரைப்பட விழாவில் ரூ,275 கோடி முதலை நெக்லஸ் அணிந்த நடிகை

Urvashi Rautela
பிரான்சில்  நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபல நடிகை ஒருவர் ரூ.275 கோடி மதிப்புள்ள முதலை நெக்லஸை அணிந்துள்ளார்.
 

பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறும். இந்த விழாவில் உலகெங்கும் உள்ள பிரபல நடிகர்கள், நடிகைகள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகளின் உடைகள், அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள்,  அவர்கள்  நிகழ்ச்சிக்கு வரும் ஆடம்பர கார்கள் என பலவும் புகைப்படக்கலைஞர்களின் கேமராவில் பட்டு,   அது  உலக சினிமா ரசிகர்களின் பார்வைக்கு எட்டும்.

அந்த வகையில், இந்தாண்டு நடைபெறும் பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வரும் நிலையில், இதில், இந்தியாவைச் சேர்ந்த பலல பிர்பல நடிகர், நடிகைகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் , ‘லெஜண்ட்’ பட நடிகை நடிகை ஊர்வசி ரவுத்தலா  அணிந்து வந்த முதலை நெக்லஸ் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆனால், பிரபல நகை வடிவமைப்பாளர் ‘ஊர்வசி அணிந்திருந்தது போலி நகை’ என்று கூறினார்.  இதற்கு ஊர்வசி ரவுத்தலாவின் பக்கத்தில் அவரது குழுவினர் வெளியிட்டுள்ள பதிவில்,’ ஊர்வசி ரவுத்தலா அணிந்திருந்த நகை ஒரிஜினல் நெக்லஸ் என்றும், இது ரூ.200 கோடி இருந்த நிலையில், இதன் விலை இப்போது ரூ.275 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளனர்.