வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 ஆகஸ்ட் 2022 (08:08 IST)

ரிஷப் பண்ட் மற்றும் தி லெஜண்ட் பட நடிகை இடையே மோதல்… பின்னணி என்ன?

இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருகிறார் ரிஷப் பண்ட்.

இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவாகி வருகிறார் இளம் வீரரான ரிஷப் பண்ட். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து விதமான போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இப்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ளார். எதிர்காலத்தில் அவர் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படவும் வாய்ப்புள்ளதாக பல முன்னாள் வீரர்கள் கணிக்கின்றனர்.

இந்நிலையில் இப்போது ரிஷப் பண்ட் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தி லெஜண்ட் திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஊர்வசி ரவுத்தாலா சமீபத்தில் ஒரு நேர்காணலில் “ஒரு ஹோட்டலில் என்னைப் பார்க்க Mr RP பல மணிநேரம் காத்திருந்தார்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக ரிஷப் பண்ட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “சிலர் தலைப்பு செய்திகளுக்காகவும் விளம்பரத்துக்காகவும் இப்படி பொய் சொல்லுவது மிகவும் வருத்தமானது” எனக் கூறி பதிவிட்டு அந்த பதிவை உடனே நீக்கவும் செய்துள்ளார். இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் டேட்டிங் செய்ததாகவும், பின்னர் பிரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போது ஏற்பட்ட மனக்கசப்பால் இப்போது இப்படி மறைமுகமாக தாக்கிக் கொள்வதாக சொல்லப்படுகிறது.