1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (13:59 IST)

புதிய லுக்கில் வைரலாகும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி - ஆளே மாறிட்டாரேப்பா!

சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தமிழகத்தில் உள்ள பிரபலகடைகளில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ். இன்று பல கிளைகளைப் பரப்பி பிரமாண்டமாகக் காட்சி தருகின்றது. அதன் விளம்பரங்கள் தான் திரைப்படம் ரேஞ்சுக்கு இன்று எல்லா சேனல்களிலும் வரிசைகட்டி வருகிறது. 
 
சரவணா ஸ்டோஸ்-ன் ஓனர் சரவணன் ஹீரோவாக தன்னை சித்தரித்து கொண்டு பல சினிமா பிரபல நடிகைகளுடன் ஆடுவதும், பாடுவடும் என மக்களைக் கவரும் அத்தனை அம்சங்களும் அதில் இருந்ததால் அவர் நடித்த விளம்பரங்கள் நன்றாக ரீச் ஆகி, செம வைரல் ஆனது.
 
அதன் பின்னர் தி லெஜெண்ட் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில் தற்போது தாடி கோட் சூட் என வித்யாசமான புதிய லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.