1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஜூலை 2024 (17:55 IST)

சாவுக்கு துணிஞ்சவங்களுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை: விக்ரமின் ‘தங்கலான்’ டிரைலர்..!

நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரைலரில் விக்ரமின் அட்டகாசமான தோற்றம் மற்றும் ஆவேசமான நடிப்பு, ஆங்கிலேயர்  கால கட்டத்தில் நடக்கும் கதை, மாளவிகா மோகனின் ஆக்ரோஷமான சூனியக்காரி கேரக்டர், ஏழை மளிகை மக்களின் அப்பாவித்தனமான உழைப்பு, தங்கம் எடுப்பதற்காக உயிரையே பணயம் வைக்கும் மக்கள், தங்கம் எடுப்பதற்காக ஆங்கிலேயர்கள் செய்யும் தந்திரங்கள், என இந்த படத்தின் டிரைலரில் பல காட்சிகள் அட்டகாசமாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு இந்த படம் புதிய அம்சமாக இருக்கும் என்றும் தெரிய வருகிறது.

குறிப்பாக ஜிவி பிரகாஷின் அட்டகாசமான பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது என்றும் கேமரா மற்றும் எடிட்டிங், பா ரஞ்சித்தின் இயக்கம் என அனைத்து அம்சமும் சிறப்பாக இருப்பதால் இந்த படம் தேசிய வருவது பெறுவது உறுதி என்றும் ரசிகர்கள் இந்த ட்ரைலர் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றன.

’சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை’ என்ற விக்ரம் பேசும் வசனத்துடன் முடியும் இந்த படத்தின் டிரைலர், படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendrn