வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (07:04 IST)

’தங்கலான்’ படத்தின் டிரைலர் எப்போது? படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. ஆனால் இந்த படத்தை சரியான ரிலீஸ் தேதியில் வெளியிட வேண்டும் என்று படக்குழுவினர் திட்டமிட்டு இருந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று செய்திகள் கசிந்தது. இருப்பினும் இன்னும் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ’தங்கலான்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி ’தங்கலான்’ திரைப்படத்தின் டிரைலர் ஜூலை 10ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக ’தங்கலான்’ திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வராமல் அதிருப்தியில் இருந்த விக்ரம் ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் திரையுலக வாழ்வில் இது ஒரு திருப்புமுனையாக படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில், கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகும்.