வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (16:31 IST)

"தளபதி 63" முதல் புஃட் பால் மேட்ச் குறித்த தகவல் !

தளபதி 63 படத்தின்  முதல் புஃட் பால் மேட்ச் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
 

 
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.
 
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.


 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜிஉள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், விஜய் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருப்பார் தகவல் வெளிவந்தது. 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், முதல் மேட்ச்க்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.இந்த மேட்ச் தமிழ்நாடு மகளிர் அணி மற்றும் மணிப்பூர் மகளிர் அணிக்கு இடையில் நடக்கும் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்த அணியில் இந்துஜா விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 
மேலும் , இந்த போட்டி FIFA , AIFF இணைந்து நடத்தும் மகளிருக்கான தேசிய கால்பந்து போட்டி என்ற தகவலும்வெளிவந்து தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.