விஜய்யை வம்பிழுத்தாரா பிரபாஸ்? கொந்தளிக்கும் ரசிகர்கள்!!!

Last Modified திங்கள், 15 ஏப்ரல் 2019 (09:45 IST)
நடிகர் பிரபாஸ் அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கை பார்த்துவிட்டு இது தெலுங்கை விட நன்றாக இருக்கிறது என புகழ்ந்தது விஜய் ரசிகர்களை கொந்தளிப்படைய செய்துள்ளது.
 
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் மெகா ஹிட்டான படம் பாகுபலி. இந்த படத்திற்கு பிறகு தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிரபாஸுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தது.  ‘பாகுபலி-2’ படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
reddy
இந்நிலையில் தெலுங்கில் விஜய் தெவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படம் கபீர் சிங் என்ற பெயரில்  ஹிந்தியில் ஷாஹித் கபூர் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனை தெலுங்கு அர்ஜுன் ரெட்டி இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கியுள்ளார்.
kabir
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை பார்த்த நடிகர் பிரபாஸ், ஷாஹித் கபூருக்கு போன் செய்து இது தெலுங்கு அர்ஜுன் ரெட்டியை விட நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்  என கூறியுள்ளார்.
 
இதனையறிந்த நடிகர் விஜய் தேவரக்கொண்டா ரசிகர்கள், பிரபாஸ் விஜய்யை தாக்கி பேசினாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :