சிங்கரான விஜய் டிவி ஆங்கர்: அதுவும் இந்த படத்தில்...
விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா கவுதம் கார்த்திக் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பிரியங்கா. இவர் தற்போது தேவராட்டம் படத்தின் ஒரு பாடலை பாடி பாடகராக் அறிமுகமகையுள்ளார்.
கொடிவீரன் படத்தைத் தொடர்ந்து முத்தையா தேவராட்டம் என்ர படத்தை இயக்கி வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் மதுர பளபளங்குது என்ற பாடலை விஜய் சேதுபதி, நிவாஸ் கே.பிரசன்னா, நிரஞ்சனா ரமணன், பிரியங்கா ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது.