புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2019 (12:59 IST)

சர்கார் கதைப்போல் ஓட்டு நீக்கம் – கொதித்தெழுந்த அப்போல்லோ முதலாளியின் மகள் !

தனது வாக்கைப் பதிவு செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து வந்த அப்போல்லோ மருத்துவமனை தலைவரின் மகள் ஷோபனா தனது வாக்கு நீக்கப்பட்டதை அடுத்து சமூகவலைதளத்தில் தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிறிது நேரம் சரியாக வேலை செய்யவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து அப்போல்லோ மருத்துவமனைகளின் தலைவரின் மகள் சோபனா ரெட்டி வெளிநாட்டில் இருந்து வாக்கு செலுத்த இன்று ஆந்திரா வந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் நீக்கப்பட்டதால் அவரால் ஓட்டுப் போட முடியவில்லை. இதையடுத்து சமூக வலைதளங்களில் தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர் ‘ ஒரு இந்திய குடிமகளாக நான் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். இது என்வாழ்நாளின் மோசமான நாளாகும். நான் வாக்குப்பதிவிற்காக வெளிநாட்டில் இருந்து வந்துள்ளேன். எனது வாக்கு முக்கியம் இல்லையா ? ‘ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் வெளியான விஜய்யின் சர்கார் படத்தின் கதையை நினைவுப்படுத்துவது போல இந்த சம்பவம் நடந்துள்ளது.