செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:18 IST)

இன்னும் நோலன் மட்டும்தான் புகார் கொடுக்கல – உச்சத்தில் சர்கார் கதை திருட்டு விவகாரம்

சர்கார் கதை திருட்டு சம்மந்தமாக வருண் என்பவர் தமிழ் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கொடுத்த புகாரை விசாரித்த தலைவர் கே பாகியராஜ் மற்றும் மற்ற உறுப்பினர்கள் சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்றுதான் என அறிக்கை வெளியிய்ட்டுள்ளது.

 
ஏ ஆர் முருகதாஸின் மீது கதை திருட்டுப் புகார் சொல்லப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் இயக்கிய ஏழாம் அறிவு, கத்தி போன்ற படங்கள் தங்களுடைய கதை என சிலர் அவர்மீது குற்றம் சாட்டியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் அவர் இயக்கிய கஜினி படமும் ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்குனர் இயக்கிய மெமண்டோ படத்தின் காப்பிதான்(அவர் எப்போது புகார் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை?). ஆனாலும் அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வணிக அளவில் பெரிய வெற்றி பெருவதால் தொடர்ந்து பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கிக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் அவர் இயக்கி தீபாவளிக்கு வெளியாக இருக்கும் அவரது சர்கார் படம்,  வருண் என்கிற ராஜேந்திரன் தான் 2007-ல் எழுதி பதிவு செய்த செங்கோல் படத்தின் கதை என புகார் தெரிவித்தார். இதையடுத்து இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு திரை எழுத்தாளர்கள் சங்கம் இரண்டு கதைகளையும் படித்துப் பார்த்து இராண்டும் ஒரே கதையே என அறிவித்துள்ளது. இதில் சர்கார் படத்தில் விஜய், சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய ஆட்கள் இருப்பதால் வம்பு வேண்டாம் என சில உறுப்பினர்கள் பயந்த போதும் தலைவர் கே பாக்யராஜ் தைரியமாக இந்த முடிவை அறிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று வெளியாகியுள்ள அந்த அறிக்கையில் ‘தெளிவாக விவாதித்து ஒரு சிலரின் கருத்து வேறுபட்டிருந்தாலும் மெஜாரிட்டியான மெம்பர்களின் ஒப்புதலோடு ’செங்கோல்’ என்ற கதையும் ’சர்கார்’ படக்கதையும் ஒன்றே என முடிவு செய்தோம். உங்கள் பக்க நியாத்திற்காக நீங்கள் (வருண்) அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை நாங்கள் தடை செய்ய மாட்டோம். முழுமையாக தங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறோம்,’ எனத் தெரிவித்துள்ளனர்.