செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:17 IST)

சர்கார் ரிலீஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக சர்கார் படத்தின் கதை தன்னுடையது என வருண் (எ) ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 
 
இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை பதிலளிக்க உத்தரவிட்டனர்.