1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 25 அக்டோபர் 2018 (15:27 IST)

சர்கார் ரிலீஸ் எப்போ? சன் பிக்சர்ஸ் அஃபீசியல் தகவல்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்துள்ள சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். 
 
அரசியல் பேசும் படமாக உள்ள சர்கார் இந்த தீபாவளிக்கு வெளிவருதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அனால், தீபாவளிக்கு முன்னதாகவே நவம்பர் 2 ஆம் தேதி படம் வெளிவரும் என்று தகவல் பரவியது.  
 
2 ஆம் தேதி படம் வெளியிடப்பட்டால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் நல்ல ஓப்பனிங், அடுத்து தீபாவளி என ஆக மொத்தம் 10 நாட்களுக்கு படம் நல்ல வசூலை அள்ளும் என கூறப்பட்டது. 
 
ஆனால், சர்கார் தீபாவளி நாளான நவம்பர் 6 ஆம் தேதிதான் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், #SarkarFromNov6th என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.