1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (08:18 IST)

கங்கனா = பகத்சிங் : வைரலாகும் விஷால் ட்விட்!!

பாலிவுட் நடிகை கங்கனாவை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் விஷால். 
 
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சிவசேனாவை நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இதனால் அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தின் சில பகுதிகள் சமீபத்தில் இடிக்கப்பட்டது. 
 
இருப்பினும் தொடர்ச்சியாக சிவசேனாவை கங்கனா ரனாவத் தாக்கி வருகிறர். இதனால் அவருக்கு பின்னணியில் பாஜக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் நடிகர் விஷால், கங்கனாவை பாராட்டிள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அன்பிற்குரிய கங்கனா, உங்களுடைய தைரியத்துக்கு பாராட்டுக்கள். எது சரி எது தவறு என்று நீங்கள் ஒன்றுக்கு இரண்டு முறை ஒருபோதும் யோசித்தது கிடையாது. 
 
இது உங்களுடைய தனிப்பட்ட விஷயம் கிடையாது. இருந்தாலும் நீங்கள் அரசின் கடும் கோபத்தை எதிர்கொள்கிறீர்கள். நீங்கள் அதில் உறுதியாக இருக்கிறீர்கள். அது உங்களை மிகப்பெரிய உதாரணமாக உருவாக்கியுள்ளது. 
 
இது, பகத்சிங் 1920- களில் செய்ததை ஒத்ததாக உள்ளது. இது, ஏதேனும் தவறாக இருக்கும்போது அரசுக்கு எதிராக பேசுவதற்கு மக்களுக்கு உதாரணமாக அமையும். அதற்கு பிரபலமாக இருக்கவேண்டும் என்பதில்லை, சாதரணமானவனாக இருந்தாலும்போதும் என குறிப்பிட்டுள்ளார்.