வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (11:55 IST)

கரண் ஜோஹர் என்னையும் அவமானப் படுத்தினார் … குற்றச்சாட்டு வைத்த நடிகரின் அண்ணன்!

பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மேல் நெப்போட்டிசக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இப்போது மற்றுமொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் நடிகரான கரண் ஜோஹர் வாரிசு அரசியலை பாலிவுட்டில் வளர்த்தெடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டை திரும்ப திரும்ப வைத்து வருகிறார். சுஷாந்த் மரணத்துக்குப் பின் அவர் மேலான குற்றச்சாட்டுகள் அதிகமாகிக் கொண்டே உள்ளன.

இந்நிலையில் முன்னணி நடிகரும் அமிர்கானின் அண்ணனுமான பைசல் கான் தானும் கரண் ஜோஹரால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லியுள்ளார். தனது சகோதரர் அமீர் கானின் 50 ஆவது பிறந்தநாள் விழா பார்ட்டியின் போது ‘நான் ஒரு நபரிடம் பேச முயன்ற போது என்னை பேசவிடாமல் ஆக்கும் விதமாக அவர் நடந்து கொண்டார் ‘ எனக் கூறியுள்ளார்.