1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (15:32 IST)

பி.சி.-ஐ ஈஸியாய் ஹேண்டில் செய்த கங்கனா!

பி.சி.ஸ்ரீராம் கங்கனா படத்தை நிராகரித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத். 
 
இந்திய சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில், கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடிக்கும் படத்தை நான் நிராகரித்து விட்டேன். எனது நிலைப்பாட்டை தயாரிப்பாளர்களுக்கு விளக்கினேன். அவர்களும் புரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று பதிவிட்டிருந்தார். 
 
இதற்கு கங்கனா ரணாவத், உங்களைப் போன்ற லெஜண்டுடன் பணிபுரியும் வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன் சார். இது முற்றிலும் என்னுடைய இழப்புதான். என்னைப் பற்றி உங்களுக்கு சங்கடமான எண்ணம் ஏற்பட என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் சரியான வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு வாழ்த்துகள் என பதிலடி தெரிவித்துள்ளார்.