1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (16:48 IST)

முன்னணி நடிகையின் சொகுசு பங்களாவில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள் !

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்தில் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை நடிகை கங்கனா ரனாவத் முன்வைத்து வந்த நிலையில் அவரது புகார்களை காவல்துறை சரியாக கையாளவில்லை என்றும், மும்பையில் இருப்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருப்பதை போல பாதுகாப்பற்றதாக உணர்வதாகவும் அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 கங்கனாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் “அவ்வளவு பயமாக இருந்தால் மும்பைக்கு வரவேண்டாம் என்றும், மகாராஷ்டிராவை அவமதித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள கங்கனா “நான் 9ம் தேதி மும்பைக்கு வருகிறேன். முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்” என கூறியுள்ளார். இந்நிலையில் கங்கனா ரனாவத்திற்கு கொலை மிரட்டல் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில். கங்கனா ரனாவத், மத்திய அமைச்சர் அமித் ஷா என்னை சில காலம் கழித்து மும்பைக்குச் செல்லும்படி கூறியுள்ளார். எனவே அவர் இந்தியாவின் மகளுக்கு கவுரவம் அள்த்துள்ளார். அதனால் தேச பகதர்களை யாராலும் ஒடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மும்பையில் உள்ள கங்கனா ரனாவத்தின் சொகுசு இல்லம் சட்டத்திற்க்கு புறம்பாகக் கட்டப்பட்டுள்ளதாகவும் இதற்கு 24 மணிநேரத்தில் பதிலளிக்குமாறு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவரது இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

மும்பையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா  கட்சி ஆட்சி நடைபெற்று வருவதால் கங்கனாவிற்கும்  சிவசேனாவின் முக்கிய தலைவர் சஞ்சய் ராவத்திற்கும் இடையிலான மோதலே இதற்குக் காரணம் என்ப் பலரும் தெரிவித்துள்ளனர்.