என்னை விட உயரமான பெண்; அனுஷ்கா வெளியிட்ட புகைப்படம்
தமிழ் சினிமாவை தாண்டி இப்போது தெலுங்கு சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார் நடிகை அனுஷ்கா. இவர் தற்போது அஜித்தின் விசுவாசம் படத்தில் நாயகியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.
பாகுபலி திரப்படம் அவரது திரை வாழ்க்கையில் மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இந்நிலையில் தீவிர முயற்சிக்குப் பின் உடல் எடையைக் குறைத்துள்ளார் அனுஷ்கா. அவர் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. இந்நிலையில், நீண்ட நாட்களாக முதுகுவலி பிரச்னையால் அவதிப்பட்டு வரும் அனுஷ்கா, கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம்.
தென்னிந்திய சினிமாவில் அனுஷ்கா நாயகிகளில் மிகவும் உயரமானவர். அவரின் உயரத்தை பல நடிகர்களும் பெரிதாக பேசியிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகை அனுஷ்கா தன்னை விட மிகவும் உயரமான பெண்ணை சில வருடங்களுக்கு முன் சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் என்னை விட உயரமான பெண் என பதிவு செய்து, புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.