வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (22:01 IST)

ஆண்டாளாக அனுஷ்கா; எந்த படத்தில் தெரியுமா?

தெலுங்கில் வெளிவந்த பக்திப்படமான ஓம் நமோ வெங்கடேசாயா என்ற படம் தமிழில் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
இப்படத்தின் நாயகனாக நாகார்ஜூனாவும் அவரது மனைவியாக அனுஷ்காவும் நடித்துள்ளனர். கிருஷ்ணரை ஒருதலையாக  காதலிக்கும் ஆண்டாளாக நடித்துள்ளார். படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அனுஷ்காவின் ரோல் அனைவராலும்  பேசப்பட்டது. இப்படத்தை இயக்கியவர் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவான கே.ராகவேந்திர ராவ். இப்படம் பக்தி ரசமும்,  சமூகப் பின்னணியும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது. பாகுபலி புகழ் கீரவாணி இசையமைத்துள்ளார்.
 
படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார் அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான பக்திப் படம். படம்  பார்த்து முடித்ததும் திருப்பதி தேவஸ்தானம் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது என்று பராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.