1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (22:00 IST)

கேரளாவில் ஆயுர்வேத கிசிச்சை எடுக்கும் அனுஷ்கா

உடல் எடை குறைந்து ஸ்லிம்மான அனுஷ்கா, கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார் என்கிறார்கள்.
‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக தன்னுடைய உடல் எடையை வெகுவாக அதிகரித்தார் அனுஷ்கா. ஆனால், அம்மா இடுப்பில்  ஏறிய குழந்தை போல. ஏறிய இடை இறங்குவேனா என அடம்பிடித்தது. இதனால், சில வருடங்கள் மிகவும் அவதிப்பட்டு  வந்தார் அனுஷ்கா.
 
‘பாகுபலி 2’ படத்தில் கூட அப்படியே தான் நடித்தார். கிராஃபிக்ஸ் மூலம் அவருடைய உடலை அழகாகக் காட்டினார்கள். உடல் எடை குறையாததால், வேறெந்த படத்திலும் கமிட்டாகாமல் தவிர்த்து வந்தார் அனுஷ்கா. இத்தனைக்கும் அவர் யோகா  டீச்சர் வேறு.
 
ஒருவழியாக தீவிர முயற்சிக்குப் பின் உடல் எடையைக் குறைத்துள்ளார் அனுஷ்கா. அவர் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. இந்நிலையில், நீண்ட நாட்களாக முதுகுவலி பிரச்னையால்  அவதிப்பட்டு வரும் அனுஷ்கா, கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம். அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில்  அனுஷ்கா தான் ஹீரோயின் என்று சொல்லப்படுகிறது.