ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2017 (22:36 IST)

அஜித்துக்கு வில்லனாக நிவின் பாலி?

அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில், வில்லனாக நிவின் பாலி நடிக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.
 
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது படம் ‘விஸ்வாசம்’. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நடிக்கிறார் அஜித். சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
 
இந்தப் படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே ‘என்னை அறிந்தால்’ படத்தில் இருவரும் நடித்துள்ளனர். இதற்கு முன்னர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த அஜித், இந்தப் படத்துக்காக டை அடித்து யங் லுக்கில் நடிக்கிறார். அனுஷ்காவும் எடை குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார் குறிப்பிடத்தக்கது.
 
இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது. அத்துடன், வில்லனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறாராம். ‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மலையாள நடிகர் பஹத் பாசில் நடிப்பதைப் போன்று நிவின் பாலியும் வில்லனாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.