1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (19:28 IST)

தேர்தல் களத்தில் குதிக்கும் டி.ராஜேந்தர்: பரபரப்பு தகவல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடக்கவிருக்கும் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் தாணு தலைமையில் ஒரு அணி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பதும் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது யார் என்பது குறித்த ஆலோசனை தற்போது தயாரிப்பாளர்கள் இடையே நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் புதிய அணி ஒன்று தற்போது உருவாகி உள்ளது இந்த அணிக்கு டி.ராஜேந்தர் தலைமை ஏற்பதாக தெரிகிறது. அவரது தலைமையின் கீழ் தயாரிப்பாளர் சங்கத்தின் அனைத்து பதவிகளுக்கு போட்டியிட வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். மன்னன் பிலிம்ஸ் .மன்னன் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவரது அணியில் இடம்பெறும் மற்ற நபர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்க்ப்படும் என்று கூறப்படுகிறது.