நடிகர் சங்க தேர்தல் அன்று 'அல்வா' கொடுக்கும் எஸ்.வி.சேகர்

Last Modified செவ்வாய், 18 ஜூன் 2019 (11:57 IST)
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடத்தில் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை ஏற்கனவே நோட்டிஸ் ஒன்றை நடிகர் சங்கத்திற்கு அனுப்பியுள்ளது
இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் நடக்கும் அதே 23ஆம், அதே ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடிகர் எஸ்.வி.சேகர் நாடகம் ஒன்றை நடத்த கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளார். அவர் நடத்தவிருக்கும் நாடகத்தின் டைட்டில் 'அல்வா' என்பது ஆகும்

எனவே ஜூன் 23ஆம் தேதி நடிகர் எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றுள்ளதால், அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. ஆனால் எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அரங்கத்திற்கு மட்டும் தான் அனுமதி பெற்றுள்ளதாகவும், தேர்தல் நடக்கவிருக்கும் இடத்திற்கும் அரங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் பாண்டவர் அணியினர் கூறி வருகின்றனர். மேலும் நடிகர் சங்க தேர்தல் நடத்தும் இடத்தை தேர்வு செய்தது, தேர்தலை நடத்தும் ஓய்வு பெற்ற நீதிபதி தான் என்றும் பாண்டவர் அணியினர் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :