செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 16 ஜூன் 2019 (19:42 IST)

ஒரே நாடு … ஒரே தேர்தல் – அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் மோடி அழைப்பு !

தேர்தலுக்குப் பின் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி மக்களவைக் கூட்டத்தில் நாடு முழுவதுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தொடங்கி வைத்த மோடி கூட்டம் புத்துணர்ச்சியோடும் புதிய சிந்தனைகளுடனும் தொடங்க வேண்டுமென்று வேண்டுகோளோடு தொடங்கிவைத்தார்.

இந்தக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஜூன் 19ஆம் தேதியன்று ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டம் முடிந்து மோடி தனது டிவிட்டரில் ’தேர்தலுக்குப் பிறகு இன்று முதல் முறையாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்து தலைவர்களும் வழங்கிய அறிவுரைகளுக்கு நன்றி. நாடாளுமன்றத்தை சுமூகமாக இயக்க அனைவரும் ஒத்துக்கொண்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.