ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 ஜூன் 2019 (13:57 IST)

மோடியின் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் – திருமாவளவன் ஆதரவு !

மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முன் வைத்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதிய மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தொடங்கி வைத்த மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஜூன் 19ஆம் தேதியன்று ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் மக்களவை உறுப்பினராக பதவி ஏற்பதற்கு இன்று டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய திருமா வளவன் மோடியின் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில் ‘நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா எனத் தெரியவில்லை. ஒருவேளை சாத்தியமானால் நல்லதுதான். கால விரயமும் தேர்தல் செலவுகளும் குறையும். இப்போது ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளியில் தேர்தல் நடக்கிறது. இதை எந்த அளவுக்கு சீர்செய்ய முடியும் எனத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.