புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 16 ஜூன் 2019 (19:51 IST)

9 தொகுதிகளில் ஏன் தோற்றம் ?– ஆய்வில் இறங்கியது திமுக !

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் அடைந்த தோல்வி குறித்து ஆய்வு செய்ய திமுக குழு ஒன்றை அமைத்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அபாரமாக வெற்றி பெற்றாலும் 22 தொகுதி இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 9 தொகுதிகளை இழந்ததால்  ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனது. இதனால் திமுக ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று திமுக வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 9 தொகுதிகளில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய திமுக தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவுக்கு தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையின் கீழ் மொத்தம் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஒருவர் என இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு  எப்போதில் இருந்து ஆய்வைத் தொடங்கவேண்டும் என்பதைப் பின்னர் அறிவிக்கப்படும் என முரசொலி தெரிவித்துள்ளது.