ஓடிடிக்கு செல்லும் ஜெய் படம்! யார் கொடுத்த ஐடியா தெரியுமா?

Last Modified சனி, 15 மே 2021 (16:42 IST)

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள குற்றமே குற்றம் திரைப்படம் ஓடிடியில் ரிலிஸாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுசீந்தரன் இயக்கத்தில் லாக்டவுன் சமயத்தில் நடிகர்ப் ஜெய் இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். அவற்றில் ஒன்றான சிவா சிவா திரைப்படம் தமிழில் ஜெய் நடிப்பிலும், தெலுங்கில் ஆதி நடிப்பிலும் உருவாக்கப்பட்டது. தெலுங்கில் அந்த படம் விற்பனை ஆகிவிட்ட நிலையில் தமிழில் மட்டும் யாரும் வாங்க முன்வரவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் ஜெய்யும் சுசீந்தரனும் இப்போது படத்தை மார்க்கெட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

அதே போல மற்றொரு படம் குற்றமே குற்றம் என்ற திரைப்படம். இந்த படத்தை ஓடிடியில் ரிலிஸ் செய்ய இப்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஓடிடிக்கு செல்லலாம் என்ற முடிவை ஜெய்தான் இயக்குனர் சுசீந்தரனுக்கு பரிந்துரைத்துள்ளாராம்.இதில் மேலும் படிக்கவும் :