திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 15 மே 2021 (16:13 IST)

காலில் விழவைக்கும் தீண்டாமை கொடுமை ! பா.ரஞ்சீத் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் பா.ரஞ்சித் இவர் சாதி வெறியர்களின் வன்மம் அடங்குவதாக இல்லை என்று டூவிட் பதிவிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில், அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பா.ரஞ்சித்., இதையடுத்து மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அடுத்து சர்பட்டா என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், இன்று பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிடப்பட்டிருந்தது. அதில், சாதி வெறியர்களுக்கு தொற்று பெரிதல்ல!! தீண்டாமை ஆணவமே பெரியது!! விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒட்டனந்தல் கிராமத்தில் பஞ்சாயத்து என்ற பெயரில் காலில் விழ வைக்கும் தீண்டாமை கொடுமையை மிக வன்மையாக கண்டிப்போம்!! எனத் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில், உலகமே கொரோனா தொற்றுக்கு அழிந்து கொண்டிருக்கிறது, ஆனால் இந்த சாதிவெறியர்களின் வன்மம் மட்டும் அடங்குவதாய் இல்லை!! தமிழக அரசு அடக்க முயற்சிக்குமா?? @mkstalin எனப் பதிவிட்டு , தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டேக் செய்துள்ளார்.