ரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுத்த சூர்யா !!

suriya
Sinoj| Last Modified திங்கள், 25 ஜனவரி 2021 (17:46 IST)
 

சூர்யா ரசிகர் மன்றத்தின் வடசென்னை தெற்கு மாவட்டத் தலைவர் மற்றும் ஐடி விங் தலைவராக இருந்து வருபவர் ஹரிராஜ். இவரது திருமணத்திற்கு நேரில் சென்ற சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம்நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படம் ஹிட் ஆகியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நீண்ட நாட்கள் கழித்து அவர் இந்த ஹிட் கொடுத்தாலும் பெரிய அளவில் அவரது நடிப்புக்காகப் பேசப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சூர்யா ரசிகர் மன்றத்தின் வடசென்னை தெற்கு மாவட்டத் தலைவர் மற்றும் ஐடி விங் தலைவராக இருந்து வருபவர் ஹரிராஜ். இவருக்குப் பிரியா என்ற பெண்ணுடன் இன்று திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு சூர்யா நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்ததுடன் தாலி எடுத்துக் கொடுத்துத் திருமணத்தை நடத்தி வைத்தார். இதுகுறித்த புகப்படங்கள் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :