திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (20:38 IST)

நடிகர் தனுஷுக்கு வாழ்த்து கூறிய சூர்யா...தனுஷின் டுவிட்டால் ரசிகர்கள் நெகிழ்ச்சி !!

அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்கள் அந்தோனி மற்றும் ஜோ குரூஷோ ஆகியோர் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு நடிகர் சூர்யா தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் பாலிவுட்டிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார் என்பதும் ஏற்கனவே இரண்டு திரைப்படங்கள் பாலிவுட்டில் அவர் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ’Atrangi Re’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்துள்ளார்.

 மேலும் கோலிவுட், பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் அவர் ஒரு படம் நடித்துள்ளார் என்பதும் The Extraordinary Journey of the Fakir என்ற டைட்டிலில் ஹாலிவுட்டில் வெளியான இந்தப் படம் தமிழில் பக்கிரி என்ற டைட்டிலில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அவெஞ்சர்ஸ் இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இயக்குனர்களின் அடுத்த படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரிக்கவுள்ளது.

’தி க்ரே மேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது. தனுஷுடன் கிரிஸ் எவன்ஸ், ரியான் கோஸ்லிங் மற்றும் அன டே ஆர்மஸ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் ஹிந்தி மட்டுமன்றி ஹாலிவுட்டிலும் மீண்டும் கால் வைத்துள்ள தனுசுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து நேற்று பாடலாசிரியர் விவேக் தமிழகத்தில் பெருமிதம் தனுஸ் என்று புகழாரம்சூட்டினார். இன்று,நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், சூப்பர் சார்…பெஸ்ட் விஸ்ஸ் சார் என வாழ்த்துகள் தெரிவித்துள்ளர். நடிகர் பிரசன்னா, உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தற்போது நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி என டுவிட் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.