திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 28 நவம்பர் 2020 (20:29 IST)

சூர்யாவின் ‘’வாடிவாசல்" வலம் வரும் வாகை சூடும் – கலைப்புலி எஸ். தாணு

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் வாடிவாசல். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவுள்ளார்.

ஏற்கனவே வெற்றிமாறனின் படங்களுக்கும் சூர்யாவின் படங்களுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ள நிலையில் இருவரும் இணையப்போவது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று தயாரிப்பாளர் எஸ். தாணு பெயரில் ஒரு போலி டுவிட்டர் அக்கவுண்டரில் ஒரு பதிவிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து தாணு தனது டுவிட்டர் பக்கத்தில்,  எஸ் , twitter.com/thivcreations இந்த ட்விட்டர் அக்கவுண்ட் என்னுடையது அல்ல, என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள். வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம். எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் @VetriMaaran) இயக்கத்தில்சூர்யா (@Suriya_offl) நடிப்பில் “வாடிவாசல்" வலம் வரும் வாகை சூடும்Folded hands #Vaadivasal #StopSpreadingFakeNews எனப் பதிவிட்டுள்ளார்.