வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2020 (15:20 IST)

சூரரைப் போற்று இந்தி ரீமேக்… இரண்டு முன்னணி நடிகர்கள் ஆர்வம்!

சூரரை போற்று இந்தி ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக நேற்று வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறான சிம்ப்ளி ப்ளை ( தமிழில் வானமே எல்லை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பல மொழிகளிலும் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்களும் நடிகரகளும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் பாலிவுட் ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகர்களான அஜய் தேவ்கன் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகிய இருவரும் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.